மத்திய மகளிர் சிறைச்சாலை இடமாற்றம் செய்யப்படும்

16 October 2025

நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்கள் தனது தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட் - பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள மகளிர் சிறைச்சாலையினை புறநகர் பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி வேறு இடத்திற் மாற்றம் செய்து காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியதற்கு மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள், மகளிர் சிறைச்சாலையை மாற்ற புறநகர் பகுதியில் இடம் கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோடுள்ளதாகவும், கிடைக்கப்பெற்றபின் உடனடியாக மாற்றுவதாகவும் தெரிவித்தார்.