கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த கடந்த 13ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பெயரில் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான குழுவினர் சிபிஐ அதிகாரிகள் இன்று கரூருக்கு வருகை தந்தனர். மேலும் இந்த விசாரணை குழுவில் சிபிஐ ஏடிஎஸ்பி முகேஷ் குமார் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கரூருக்கு வருகை தந்த இந்த குழு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணையை நாளை தொடங்க உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.