டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார்த்தி பற்றி எரிந்து வெடித்து சிதறிய சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி தற்போது வரை அந்த சம்பவம் மக்களை பதட்டம் அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தங்களது இரங்கலையும் இந்த கோர சம்பவத்தில் தீவிரவாதிகள் தொடர்பு இருப்பதாக கண்டனத்தையும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிச்சயமாக தண்டனை வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது அமித்ஷா இந்த தகவலை தெரிவித்துள்ளார்...