கார் வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

17 November 2025

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த பத்தாம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது...