டெல்லி செங்கோட்டை அருகே கடந்த பத்தாம் தேதி கார் வெடிப்பு நடைபெற்றது இதில் 15 பேர் பலியாகியுள்ள நிலையில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் அமீர் ரஷீத் அலி என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் காரை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் மற்றும் அவரின் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்றதில் இந்த தாக்குதல் தற்கொலை படை தாக்குதல் என உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜசீர் பிலால் வாணி என்பவர் கைது செய்யப்பட்டு அவரை இன்று டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் இவரை ஆஜர் படுத்தும் முன்பு நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனி அறையில் அவர் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்திரா அவரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.