ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் பண்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் காரின் பின்னால் வந்த லாரி டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த லாரி கார் மீது வேகமாக மோதி கார் மீது லாரி கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த ஒருவர் மற்றும் லாரி டிரைவர் ஆகியோர் உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடனடியாக நாலு பேரின் உடலையும் மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்...