டெல்லி கோவிந்தபுரி அருகே இன்று சொகுசு கார் ஒன்றில் தனது ஐந்து வயது மகனுடன் பெண் ஒருவர் பயணித்தார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிக்னலில் கார் நின்று கொண்டிருந்தபோது காரில் திடீரென தீ பற்றி எரிந்தது. தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீசார் காரில் இருந்த பெண் மற்றும் அவரது மகனை பத்திரமாக மீட்டு உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் தீயில் கருகி சேதம் அடைந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.