கனடாவின் எட்மாண்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அப்பகுதியில் காரில் அமர்ந்திருந்த இரண்டு நபர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு அங்கு இருந்து தப்பி ஓடினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து தீவிர விசாரணை நடத்திய போது இந்த சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு பேரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் மற்றும் ரன்வீர் சிங் என உறுதியாகியுள்ளது. அவர்கள் இருவரும் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் வேறு யாரையோ கொலை செய்ய திட்டமிட்டு அதற்கு பதிலாக இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் சென்று வாழும் இந்தியர்களுக்கு இந்த சம்பவத்தின் மூலம் பாதுகாப்பே இல்லாத சூழல் உருவாகியுள்ளது என பலரும் தனது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவத்தில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளது அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...