நம் உடலில் உள்ள எலும்புகள் உறுதி பெற கால்சியம் மிக முக்கியம் என்பதை நாம் அறிவோம்.. ஆனால் கால்சியத்தை விட புரதச்சத்து மிகவும் முக்கியமாகும். ஏனெனில் புரதச்சத்து மற்றும் கால்சியம் ஒன்றிணைந்து நமது எலும்புகளை பலப்படுத்துகிறது. அந்த வகையில் பருப்பு வகைகள், சோயா, காளான், முட்டை, இறைச்சி, பால் உள்ளிட்ட பொருட்களில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. எனவே அவற்றை நாம் தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் புரதச்சத்து அதிகமாவது மட்டுமல்லாமல் எலும்புகளை பலப்படுத்த உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்....