தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்த நிலையில் காமராஜர் புறம் பகுதியில் சென்ற போது இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த உடனேயே அங்கு சென்ற மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...