கடலூர் அருகே கோர விபத்து: ஒன்பது பேர் பலி

24 December 2025

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று சென்று கொண்டிருந்தபோது கடலூர் மாவட்டம் எழுத்தூர் பகுதியில் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. 
இதில் பேருந்து தாறுமாறாக ஓடி எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் ஏராளமான காயமடைந்துள்ளனர். இதில் இரண்டு கார்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து போனது.
மேலும் உடனடியாக அந்த பகுதிக்குச் சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரயோக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.


மேலும் சிகிச்சையில் காயம் அடைந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை வருகின்றனர். இந்த கோர விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.