நாளை நடைபெறுகிறது பாஜக உயர்மட்ட குழு கூட்டம்

16 December 2025

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தலைமை தாங்க உள்ளார். இதில் எதிர்பாரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் குறித்த முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.. குறிப்பாக தொகுதிவாரியான நிலவரம் பிரச்சார திட்டங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது....