கார் மோதி ஒருவர் பலி

26 October 2025

அமர்ந்திருந்தவர்கள் மீது கார் மோதி ஒருவர் பலி 2 பேர் காயம்


விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு சர்வீஸ் சாலையில் திமுக விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் பேரன் ராமதாஸ் (35) மது அருந்திக் கொண்டிருந்தபோது, போலேரோ கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் கார் ஓட்டியதாக நரேந்திரன் என்ற நபர் மீது போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.