பீகார் தேர்தல் தொகுதி பங்கீடு நிறைவு-101 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக கூட்டணி

12 October 2025

பீகார் சட்டசபை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தொகு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மொத்தம் 243 தொகுதிகளில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101  தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் மற்ற கூட்டணி கட்சிகளான ஹிந்துஸ்தானி அவாம் மோர்சா, ராஷ்டிரிய லோக் மோர்சா கட்சிகள் பல ஆறு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.