பீகாரில் 20 ஆண்டுகளில் 70 ஆயிரம் படுகொலைகள்: ஆர்.ஜே.டி. பரபரப்பு குற்றச்சாட்டு

24 January 2026

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக ராஷ்டீரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.


இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஜே.டி. தலைவர் சஞ்சய் யாதவ், கடந்த 20 ஆண்டுகளில் பீகாரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளதாகப் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.


மேலும், பீகாரில் உள்ள காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் கூட இல்லை என்றும், ஆனால் தேர்தலின் போது பெண்களுக்குப் பணம் வழங்கி வாக்குகளைப் பெற முயற்சிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். ஏற்கனவே ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை நிதிஷ் அரசு பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது இந்த புதிய புள்ளிவிவரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.