 
	 
								பீகாரில் சட்டசபை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் பீகாரில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாகியுள்ளது. தற்போது பீகார் தேர்தலுக்கான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை இன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி, பாஜக தலைவர் ஜே பி நட்டா மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர் இணைந்து வெளியிட்டனர். 69 பக்க தேர்தல் அறிக்கையில் முக்கியமான சில வாக்குறுதிகள் 
ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்
விவசாயிகளுக்கு நிதி உதவி 6 ஆயிரத்தில் இருந்து 9000 ஆக உயர்த்தப்படும் 
உயர்கல்வி பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு மாதத்திற்கு 2000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் 
பீகாரில் நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அடங்கியுள்ளன...