நம்முடைய ஊரில் மிகவும் சுலபமாக எப்போது வேண்டுமானாலும் கிடைப்பது வெற்றிலை தான். த வெற்றிலையின் மகிமை நிறைய பேருக்கு தெரிவதில்லை. வெற்றிலை ஒரு சிறந்த மருத்துவ தாவரம் ஆகும். வெற்றிலை ஜீரணத்தை மேம்படுத்தும். மேலும் வயிற்று வலியையும் குறைக்கும் தன்மை வாய்ந்தது. இந்த வெற்றிலை குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்கள் வரை இருமல் மற்றும் சளிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். மேலும் புற்றுநோய் எதிர்ப்பு சக்திகளை வெற்றிலை இலைகள் கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது....