உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் காசா போர் காரணமாக பாலஸ்தீனம் பகுதியில் ஏசு பிறந்த பெத்லகேமில் கடந்த இரண்டு நாட்களாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் வருத்தத்தில் இருந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்று பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
மேலும் இதனை ஒட்டி பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்பட்டு, ஜெருசலேமில் இருந்து பெத்லகேம்க்கு செல்லும் பாரம்பரிய ஊர்வலமும் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.