கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின், காமராஜர் விருது பெற்ற பள்ளியாக உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக திகழ்கிறது.
உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 1974ம் ஆண்டு அரசு உயர்நிலை பள்ளியாக துவங்கப்பட்டது. பின்னர் 1994ம் ஆண்டு முதல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் கடந்த பத்தாண்டுகளாக, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒழுக்கத்துடன் கூடிய தரமான கல்வியை பள்ளி அளித்து வருவதால் மாணவிகளின் சேர்க்கை ஆண்டு தோறும் உயர்ந்து வருகிறது. பெற்றோர்கள் தம் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்ப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்பள்ளியில் தமிழ் வழி, ஆங்கில வழி என இரு பயிற்று முறை உள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்கள் ஸ்மார்ட் கிளாஸ் தொழில்நுட்ப உதவியுடன் பல்வேறு கற்றல் முறையில் மாணவிகளுக்கு பள்ளி பாடங்களை கற்றுத் தருகின்றனர். ஸ்மார்ட் கிளாஸ் முறை மாணவிகள் எளிதாக பாடங்களை புரிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது.
கொற்றவை செய்தியாளர் அ ஐயப்பன்