உளுந்தூர்பேட்டை பெஸ்கி உயர்நிலைப் பள்ளியில் மகளிர் தின விழா

07 March 2026

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள பெஸ்கி மேல்நிலைப்பள்ளியில், சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி நர்மதா ஐயப்பன், முதல் பரிசாக ₹15,000 ரொக்கத் தொகையையும், சுழற்கேடயத்தையும் பெற்றார். மேலும், இரண்டாம் பரிசாக ₹10,000-மும், மூன்றாம் பரிசாக ₹5,000-மும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் செல்வி முஸ்ரா  நகராட்சி அலுவலர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இந்த சிறப்பு விழா, பாரம்பரியத்தையும், நவீனத்தையும் இணைக்கும் வகையில் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்....