குளிர்காலத்தில் உங்களுக்கு காது வலி ஏற்படுகிறதா???

11 December 2025

குளிர் காலங்களின் போது பலருக்கும் காது வலி ஏற்படுவது இயல்பான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

ஆனால் இது போன்ற பிரச்சனைகளை உடனடியாக நாம் பார்க்க தவறிவிட்டால் அது பெரிய விபரீதத்தில் கொண்டு சென்று விடும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

குளிர்காலத்தில் காது வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பது மிகப்பெரிய ஒரு ஆலோசனையாக இருந்து வருகின்றது. ஏனென்றால் இந்த வலி முகத்தில் இணைந்துள்ள நரம்பில் அழுத்தத்தை கொடுக்கும். இதனால் நரம்பின் செயல்பாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும். அதுமட்டுமின்றி இதனால் முகத்தில் உள்ள தசைகளின் செயல்பாடும் முடங்கிப் போய் விடுகிறது. இதனால் முகவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

எனவே குளிர்காலங்களில் நாம் காதுகளை மூடிக்கொள்ளும் வகையில் ஸ்கார்ப் மற்றும் குல்லாக்களை பயன்படுத்த வேண்டும். மேலும் குளிர் காற்று காதுக்குள் செல்வதை தடுப்பதன் மூலம் இந்த பிரச்சனையை நாம் தடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்,...