வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
23 January 2026
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வரும் ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (UFBU) இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை, காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிடுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாள் போராட்டத்தினால் பணப் பரிவர்த்தனை மற்றும் காசோலை பரிமாற்றம் போன்ற வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக வங்கி நிர்வாகங்களுடன் நடத்தப்பட்ட சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் எனத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.