சென்னை வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக் கிளையில் கடந்த ஐந்தாம் தேதி பர்தா அணிந்து கொண்டு வந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு வங்கியில் கணக்கு இருப்பதாகவும் தனக்கு வங்கி கணக்கு தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிவிட்டுச் சென்ற அவர் நான்கு நாட்கள் ஆகியும் திரும்பி வரவில்லை. மேலும் அவர் சென்றபோது அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்த பையை வங்கி ஊழியர்கள் பார்த்தபோது அதில் ஒரு கிலோ எடை கொண்ட தங்க கட்டியும் 256 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் வளையல்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வேளச்சேரி போலீசார் விசாரித்து வரும் நிலையில் அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த தங்க கட்டி மற்றும் நகைகளின் மதிப்பு ஒரு கோடியே 50 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது....