வங்கதேசத்தில் நாடாளுமன்ற முற்றுகை: பரப்பு

20 December 2025

வங்கதேசத்தின் முன்னணி இளைஞர் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாதி (Sharif Osman Hadi) காலமானதைத் தொடர்ந்து அந்நாடு முழுவதும் கடும் பதற்றம் நிலவி வருகிறது.




போராட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று (சனிக்கிழமை) பிற்பகல் ஷெரீப் உஸ்மான் ஹாதியின் இறுதி ஊர்வலம் மற்றும் தொழுகை டாக்கா நகரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே (Manik Mia Avenue) நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.



 இந்த நிகழ்வையொட்டி நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ராணுவத்தினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BGB) குவிக்கப்பட்டுள்ளனர்.



கடந்த டிசம்பர் 12-ம் தேதி டாக்காவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்ட ஹாதி, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 18 அன்று உயிரிழந்தார்.
போராட்டத்தின் பின்னணி
இந்த மரணம் வங்கதேசத்தில் புதிய வன்முறை அலைகளை உருவாக்கியுள்ளது.


ஹாதியின் மரணச் செய்தி வெளியானதும், போராட்டக்காரர்கள் டாக்காவில் உள்ள The Daily Star மற்றும் Prothom Alo போன்ற முன்னணி பத்திரிகை அலுவலகங்களைச் சேதப்படுத்தி தீ வைத்தனர்.

 ஹாதியைச் சுட்டவர்கள் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறி, போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.



இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இன்று (டிசம்பர் 20) தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளார். அவரும் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.