பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும்: மருத்துவ மாணவர்கள் சங்கம்

23 December 2025

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்நாட்டில் பெரும் போராட்டங்கள் வெடித்த நிலையில் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்ததால் அவர் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

மேலும் இந்தப் போராட்டங்களில் பல வன்முறைகள் நடைபெற்ற நிலையில் வங்கதேசத்திலிருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் இந்த சம்பவத்திற்கு பின் இந்தியா வங்காளதேச உறவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 

மேலும் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்களின் முக்கிய நபராக செயல்பட்டவர் ஷெரிப் உஸ்மான் ஹாதி.

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி டாக்காவின் பிஜோய் நகர் பகுதியில் ஷெரிப் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்த நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த செரிப் கடந்த 18ஆம் தேதி உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்ததை அடுத்து வங்கதேசத்தில் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.. இந்த நிலையில் இந்தியாவில் வங்கதேசத்துக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதாக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்தது. 

இந்த நிலையில் வங்கதேசத்தில் படித்து வரும் மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அகில இந்திய மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது...