வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவருமான கலிதா ஜியா உடல்நிலை பிரச்சனை காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 13ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது மறைவிற்கு அனைத்து அனைத்து நாடுகளை சேர்ந்த தலைவர்களும் இரங்கல்களை தெரிவித்துள்ள நிலையில் அவருடைய மறைவை தொடர்ந்து வங்காளதேசத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நாடு முழுவதும் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலிதா ஜியாவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இதனை ஒட்டி இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்...