உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி - பேரணி 1000 கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு...
24 December 2025
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி - பேரணி 1000 கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு...
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையின் ஐசிடிசி பிரிவு சார்பில் இடையூறுகளை கடந்து எச்ஐவி எய்ட்ஸ் தொடர்பான எதிர் விளைவுகளை மாற்றுதல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை ஐசிடிசி பிரிவு சார்பில் இடையூறுகளை கடந்து எச்ஐவி எய்ட்ஸ் தொடர்பான எதிர் விளைவுகளை மாற்றுதல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியுடன் துவங்கி, உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். மாலினி, காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன், வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளர் நல்லதம்பி, முதன்மை மருத்துவ அலுவலர் அன்புமணி ஆகியோர் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர் பேரணி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் சென்றடைந்தது பேரணியில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள், சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள், நர்சிங் கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு சம்பந்தமான கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர், ஐசிடிசி ஆலோசகர் ராஜன் மற்றும் தொழிலதிபர் தவிடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்....
இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்