பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் என்று வயது மூப்பின் காரணமாக காலம் அடைந்தார்.
இவர் கடந்த சில காலமாகவே வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல்நிலை பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை 5.30 மணி அளவில் அவர் இயற்கை எய்தினார். இவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவருடைய மரணச் செய்தி அறிந்த திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெற்றி படங்களான நானும் ஒரு பெண், சம்சாரம் அது மின்சாரம், சிவாஜி, வேட்டைக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களையும் இவர் தயாரித்துள்ளார். இவருடைய மரணம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....