பீகார் மாநிலம் சேக்புரா மாவட்டம் சிவாரா நகரில் இருந்து சேக்புராவிற்கு இன்று ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் 12 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் எதிரே வந்த லாரி ஒன்று ஆட்டோவின் மீது நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த ஆறு பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
இந்த சிகிச்சை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...