திருப்பூர் மாநகராட்சியை கலைக்க வேண்டும் அதிமுக பொள்ளாச்சி எம்.எல்.ஏ அவேசப் பேச்சு

26 November 2025

திருப்பூர் மாநகர மாவட்ட செய லாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலைமையில் திருப்பூர் குமரன் சிலை முன்பு மாநகராட்சி கலைக்க வேண்டும் என்று கூறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


ஆர்ப்பாட்டத்தின் போது எம் எல் ஏ பொள்ளாச்சி ஜெயராமன் திமுக ஆட்சி முடிவதற்க்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது.இன்னும் 100. நாட்களில் இந்த ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி குப்பை வரி கடுமையாக உயர் த்தப்பட்டுள்ளது ஆனால் குப்பை அகற்றப்படாமல் உள்ளது. டாலர் சிட்டி தற்போது குப்பை சிட்டியாகி விட்டது.அள்ளப்படாத குப்பைக்கு டன்னுயு 4 ஆயிரத்து 638. வழங்குகி றார்கள் இந்தப் பணம் எங்கே போகிறது நமது மேயர் அடிக்கடி துபாய் சென்று வருகிறார் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளால்  நோய் பரவி வருகிறது நாற்றம் அடிக்கும் இந்த நகரத்துக்கு வெளி நாட்டவர்கள்  யாவரும் ஜவுளி வாங்க வருவார்களா, குப்பை அள்ளுவதில் நடக்கும் ஊழல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.

திமுகவினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை எதிர்த்தனர் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டாமா 
கள்ள ஓட்டுக்கு பெயர் போன திமுகவினர் கடந்த தேர்தலின் போது 30 லட்சம் கள்ள ஓட்டுகளை போட்டு தான் ஆட்சிக்கு வந்தனர் 

திருத்தப் பணியை எதிர்த்த திமுக வினர் தற்போது வாக்குச்சாவடி நிலைஅலுவலர்களை மிரட்டி கள்ள ஓட்டுகளை சேர்க்க தயாராகி விட்டனர் திருப்பூரில் நடைபெறும் குப்பை ஊழலுக்காக மேயர் மன்ற தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் மாநகராட்சி கலைக்க ப்பட வேண்டும் தேர்தல் முடிந்ததும் எடப்பாடி பழனிச்சாமி அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார் என்று பேசினார். 

முன்னதாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் குப்பை அல்ல படாமல் சுகாதாரக் கேடு ஏற்படுவதை கண்டித்தும் சாலைகள் சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக கூறியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன 

ஆர்ப்பாட்டத்தில் எம் எல் ஏக்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் 
எம்எஸ் எம் ஆனந்தன் விஜயகுமார் முன்னாள் எம் பி சிவசாமி மாநக ராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி கொறடா கண்ணப்பன் ஜெயலலிதா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் வர்த்தக அணி செயலாளர் எஸ் பி எம் பழனிச்சாமி எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் வேல் குமார் சாமிநாதன் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன் பகுதி செயலாளர் தங்கராஜ் கனகராஜ் முன்னாள் கவுன்சிலர் ஆனந்த் உட்பட பகுதி செயலாளர் நிர்வாகி கள் பாஜகவினர் தாமாக வினர் என பலரும் கலந்து கொண்டனர் 

மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்.