சட்டசபை கூட்டத்தில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி

14 October 2025

தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் எட்டு பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் உயிரிழந்த முக்கிய பிரபலங்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. 

அனைவருக்கும் மௌன அஞ்சலி செலுத்திய உடன் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதனுடன் கூட்டம் நிறைவடைந்தது. மேலும் நாளை நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் 2025 - 2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் அளிக்கப்படும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கேள்வி நேரம் மற்றும் விவாதங்கள் நடைபெற்று இந்த மாதம் 17ஆம் தேதியுடன் சட்டசபை கூட்டம் நிறைவடைகின்றது.