தீபாவளி பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் இன்று முதலே பட்டாசு வெடித்தல் என கொண்டாட்டம் தொடங்கியுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்களும் தங்களது தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இந்திய ராணுவ வீரர்கள் கொண்டாடிய தீபாவளியில் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தீபாவளியை கொண்டாடி இனிப்புகளை பகிர்ந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதன் மற்றொரு பகுதியாக ஜம்மு மாவட்டத்திற்கு உட்பட்ட அக்னூர் நகரிலும் ராணுவ வீரர்கள் அப்பகுதி மக்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.