தகாத உறவு. தகராறு பேசுவதை தவிர்த்ததால் அரிவாள் வெட்டு

13 November 2025

பொங்கலுார்: திருப்பூர் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில், கை மற்றும் கால் துண்டானது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர் அருகே பெருந்தொழுவு டி.கே.எஸ். நகரை சேர்ந்த ஜான்சன் மனைவி சித்ரா, 36. கடந்த, 2021ல் ஜான்சன் இறந்துவிட்டார். சித்ரா, தனது 14 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.




கரட்டுப்புதுாரை சேர்ந்த கார் ஒர்க் ஷாப் உரிமையாளர் கருப்பண்ணன் என்பவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் கல்லுாரியில் படிக்கும் மகன், மகள் உள்ளனர்.


சித்ராவுடன் உள்ள தொடர்பை அறிந்த கருப்பண்ணன் மனைவி அமுதவல்லி, ''என் கணவரை விட்டு சென்று விடு,'' என்று சித்ராவிடம் சில மாதங்களுக்கு முன் பிரச்னை செய்துள்ளார். இதனால், கருப்பண்ணனுடனான தொடர்பை சித்ரா முற்றிலும் துண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கருப்பண்ணன் நேற்று காலை சித்ரா வீட்டுக்கு சென்று பிரச்னை செய்துள்ளார்.




இதில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால், தான் தயாராக கொண்டு சென்ற அரிவாளால், சித்ராவை பல இடங்களில் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில், சித்ராவின் இடது கை, வலதுகால் துண்டாகி தொங்கியது.


இதைப் பார்த்து வெட்டிய கருப்பண்ணனே கலங்கி போய் உள்ளார் உடனே அவரே 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்து சித்ராவை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார் அங்கு சித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது 


இந்நிலையில் தகாத உறவில் தகராறு ஏற்பட்டு தன் கள்ள காதலியை காட்டுத்தனமாக வெட்டிய கருப்பண்ணன் கருணையோடு கள்ள காதலியை அவரே ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது


மா.ஜாபர் அலி செய்தியாளர்