அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: 3,000 ஆண்டுகள் பழமையான மரங்கள் அழிவு
12 February 2026
அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட தெற்கு அரைக்கோள நாடுகளில் நிலவும் கடுமையான வெப்ப அலை மற்றும் காட்டுத்தீ காரணமாக, யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 3,000 ஆண்டுகள் பழமையான மரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ள நிலையில், அங்கு சுமார் 4 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பும், 15,000 கால்நடைகளும் தீக்கிரையாகியுள்ளன.
எல் நினோ தாக்கத்தினால் 2026-ஆம் ஆண்டு மனித வரலாற்றிலேயே மிக அதிக வெப்பம் பதிவாகும் ஆண்டாக மாறக்கூடும் என்றும், மனிதனால் தூண்டப்படும் பருவநிலை மாற்றங்கள் இயற்கையான சுழற்சியைப் பெரிதும் பாதித்துள்ளன என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.