அரசு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து..!!

21 January 2025

ஆம்பூர் அருகே அரசு துவக்க பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில்

விடைத்தாள்கள் வருகை பதிவேடு நோட்டுப் புத்தகங்கள் எரிந்து சாம்பல்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சியில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் துவக்கப் பள்ளியில் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பள்ளியில் உள்ள மாடியில் திடீரென புகையுடன் தீ பற்றி எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்து தீயணைப்பு துறையினர் மற்றும் உமராபாத் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணயில் ஈடுபட்டனர். அப்போது தீயில் எரிந்து கொண்டு இருந்த கம்ப்யூட்டர் மற்றும் விடைத்தாள்களையும், வருகை பதிவேடு நோட்டுப் புத்தகங்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து அனைத்தனர். இருப்பினும் விடைத்தாள்கள் வருகை பதிவேடு நோட் புத்தகங்கள் தீயில் எறிந்து நாசமாகின. இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து உம்ராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



செய்தியாளர்
சுரேஷ்குமார்