வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை எதிர்த்து திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மத்திய திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் திருப்பூர்
ரயில் நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
மத்திய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுவதாக கூறியும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ தலைமை தாங்கி பேசுகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி வாக்கு திருட்டுக்கு வழிவகுக்கும் என்று கூறி அதற்கு திமுக தலைமையிலான கூட்டணி கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தலுக்குப் பிறகு இந்த திருத்தப் பணியை செய்ய வலியுறுத்திய பிறகும் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவசரகதியில் சிறப்பு சீர்திருத்தப் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது இந்தப் பணி சரியாக செய்யும் வகையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கூட்டணி கட்சியின் வாக்குச்சாவடி நிலை முகவர்களும் சென்று கண் காணிக்க வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மூ நாகராஜன் வடக்கு மாநகர செயலாளர் தங்கராஜ் கூட்டணி கட்சியைச் சார்ந்த கிருஷ்ணன் கோபிநாத் பழனியப்பன் (காங்கிரஸ்) நாகராஜ் (மதிமுக) முத்துக்கண்ணன் (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் ) செந்தில்குமார் (இந்திய கம்யூனிஸ்ட் ) செய்யது முஸ்தபா.ஹம்சா(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)மற்றும்(கொ.ம.தே.க) மக்கள் நீதி மையம்.விடுதலை சிறுத்தைகள் கட்சி.தமிழக வாழ்வு ரிமை கட்சி. திராவிடர் கழகம் மனிதநேய மக்கள் கட்சி.மனித நேய ஜனநாயக கட்சி.உள்ளிட்ட கூட்டணி கட்சினர் தொண்டர்கள் கலந்து கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் சிறப்பு திருத்தப்பணியை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
மா.ஜாபர் அலி செய்தியாளர்
திருப்பூர்.