உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனை

25 November 2025

உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் மற்றும் ஊழியர்களிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ...


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன உரிமம் ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிமம் புதுப்பிப்பது போன்ற பணிகளுக்காக இடைத்தரகர் மூலம் அதிகளவு லஞ்சம் பெறுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் எழுந்தது புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினர் இதில் கணக்கில் வராத 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் , அலுவலக ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்...


இரா.வெங்கடேசன்,  சப்எடிட்டர் 
கொற்றவை நியூஸ்