அரபு பாடசாலையின் ஆண்டு விழா.

02 February 2026

ஜம்இய்யத்து அஹ்லில் குர்அன் வல் ஹதீஸ் பள்ளி வாசல் திருப்பூர் மாவட்டம் சத்தியா நகர் கிளை ஜுலைஹா மக்தப் மதரஸா அரபி பாடசாலையின் 11.ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் வரும் ரம்லானை வரவேற்போம் என்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பிப்ரவரி 2-2026 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கிளைத்தலைவர் சையது அபுதாஹீர் தலைமை தாங்கினார். இஸ்லாமிய அழைப் பாளர் ஜமேஷா தலைமை உரையா ற்றினார்.பெற்றோர்கள் கண்ணி யம்.என்ற தலைப்பிலும் இக்பால் அவர்களும்.ரமலானை வரவேற் போம் என்றது. தலைப்பில் அன்சாரி அவர்களும் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சி இறுதி யில் ஜாகிர் உசேன் நன்றி கூறினார். 

இதில் அரபி கல்வி பயின்ற குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது மேலும் குர்ஆன் மனப்பாடம் மார்க்க சொற்பொழிவு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தரவேண்டியது நேரமா நிதி"யா தலைப்பில் பட்டி மன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடை பெற்றன. 

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கழன்று சிறப்பித்தனர். 

செய்தியாளர் 
மா.ஜாபர் அலி திருப்பூர்.