கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

01 November 2025

ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள காசி புக்கா என்ற பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இன்று சர்வ ஏகாதசியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். இதனால் அங்கு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சில பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.