உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் இரவு பெய்த கனமழையால் கூரை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

02 August 2025

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் இரவு பெய்த கனமழையால் கூரை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு அவரது உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக கன மழை பெய்தது இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசமாள் 98 வயதான இவர் தனியாக கூரை வீட்டில் வசித்து வந்தார் இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு  கனமழை பெய்தது இதனால் கூரை வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து உள்ளது மண் சுவற்றில் சிக்கிய மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்  மண் சுவற்றில் சிக்கி மூதாட்டியின் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்...

சப் எடிட்டர்...  இரா.வெங்கடேசன்