நாடாளுமன்ற மக்களவையில் இன்று தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எஸ் ஐ ஆர் தொடர்பான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விவாதத்தில் இருந்து ஒருபோதும் விலகவில்லை என தெரிவித்தார். மேலும் ஒரு வெளிப்படையான வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான நடைமுறை தான் இந்த எஸ் ஐ ஆர் திருத்தம் என தெரிவித்த அவர் இதில் பல்வேறு முக்கியமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். மேலும் வாக்காளர் பட்டியலை சரி செய்வதே எஸ் ஐ ஆரின் பணியாகும் எனவும் அவர் தெரிவித்தார்...