தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவர் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். மேலும் இந்த சந்திப்பில் தமிழக பாஜக மேல் இட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரவு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமீர் சாவை சந்தித்து பேசினார். மேலும் இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன....