பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைகின்றன. இந்த நிலையில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சியாகரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர் நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது மதியம் ஒரு மணிக்கு பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பீகாரை வெள்ளமற்றதாக மாற்ற ஒரு ஆணையத்தை அமைக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொழிற்சாலைகளை அமைப்போம் மேலும் கூடுதலாக எம்.எஸ்.எம்.ஏ தொழில் துறை பூங்காக்களை உருவாக்குவோம் என அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி லாலுவின் ஆட்சிக் கலத்தில் மத்திய அரசு பீகாருக்கு 2.80 லட்சம் கோடி வழங்கிய நிலையில் 10 ஆண்டுகளில் 18.70 லட்சம் கோடியை பிரதமர் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்