திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி இன்று சுவாமி தரிசனம் செய்தார். இன்று அதிகாலை கோவிலுக்கு வந்த முகேஷ் அம்பானிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரகாரங்கள் முழுவதும் உள்ள சுவாமிகளை தரிசனம் செய்த அவர் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு பின்னர் மும்பைக்கு திரும்பினார்.