சென்னை
ஆலந்தூரில் அமைந்துள்ள மாண்போர்ட் மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் புதுமையான அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இன்று 17.10.2025
SPARK EXPO 2025 – "Light in the skies sparks our circuit” என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் தீபாவளி நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாணவர்களின் அறிவாற்றலையும்,படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கண்காட்சி பள்ளியின் தலைமை ஆசிரியர்
அருட்சகோ. ம. அலெக்ஸாண்டர் ,
அறிவியலில் உலகின் அதிசயங்களை உணரவும்,
மாணவர்கள் சிந்தனைகளில் வெளிப்படும் புதுமைகளை ஊக்கமளித்து, குத்து விளக்கேற்றி "மாணவர்கள் அறிவியலின் வழியாக சமூக முன்னேற்றத்தில் பங்காற்ற வேண்டும்” எனக் கூறி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தக் கண்காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. இக்கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் அருட்சகோ.த.ஆல்வின் ஜோஸ்
வழிகாட்டுதலில், அறிவியல் துறை ஆசிரியர்களின் கூட்டு முயற்சியுடன், மாணவர்கள் பல்வேறு துறைகளில் குறிப்பாக மின்னணு விலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ரோபோடிக்ஸ், செயற்கை நுணறிவு உள்ளிட்ட புதுமையான திட்டங்களை உருவாக்கியுள்ளனர். இக்கண்காட்சிக்கு
C.பாலசந்திரன் B.com., MBA., B.L., இயக்குநர், மாவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். அருட்சகோ.ஜான் பெர்க்மான்ஸ் க.ச. மற்றும் அருட்சகோ.ஜோசுராஜ் க.ச. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த கண்காட்சி மாணவர்களுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. இது வெறும் பாடப்புத்தக அறிவை மட்டும் சார்ந்தது அல்லாமல், "ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் உறுதுணையால்
"அறிவியலின் ஒளி எதிர்காலத்தின் வழிகாட்டி”
என்ற உண்மையை ஊட்டும் வகையில் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் பிரகாசமான மேடையாக, எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த களமாக கல்விப் பயணத்தின் இன்னொரு மைல்கல்லாக அமையும் என்பதில் எந்த ஒரு ஐயமில்லை.
இப்படிக்கு :
கொற்றவை ரிப்போர்ட்டர்
கே.அப்துல் காதர்