பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை ஆக்கிரிமிப்பை அகற்ற அதிரடி காட்டிய அதிகாரிகள்.

19 November 2025

திருப்பூர், காங்கயம் கிராஸ் ரோடு முதல் நல்லுார் வரையில், ரோட்டின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத் துறை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த கட்டடங்களுக்கு கடந்த மாதம் மற்றும் கடந்த வாரம் இது குறித்த எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை கால அவகாசம் வழங்கி, ஆக்கிரமிப்பு அகற்ற கெடு வழங்கப்பட்டது.


இந்நிலையில், நேற்று காலை, உதவி கமிஷனர் ஜான் தலைமை யில், பலத்த போலீஸ் பாதுகாப் புடன் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் கவிதா முன்னிலையில், ஊழியர்கள் ஆக்கிரிமிப்புகளை அகற்றும் பணியில் இறங்கினர் அதன்படி
காங்கயம் கிராஸ் ரோடு துவங்கி, ஒவ்வொரு கட்டடத்தின் முன்புற மும் இருந்த ஆக்கிரமிப்பு் பொக் லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.இதைப்பார்த்த 

ஒரு சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன் வந்து தங்கள் பொருட்களை அகற்றத் துவங் கினர். இன்னும் சில கடை உரிமை யாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.இருப்பி னும், ஆக்கிரமிப்புகளை அதிகாரி கள் அதிரடியாக அகற்றினர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒரு சிவரை போலீசார், எச்சரித்து அனுப்பினர். 

மேலும் காங்கேயம் பிரதான சாலையில் அமைந்துள்ள திருப்பூர் கிளை அரசு போக்கு வரத்து கழக அலுவலக வாயி லில் நெடுஞ் சாலை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து தொழிற் சங்கத்தினர் கொடிக்கம்பங் களும், தொழிற்சங்க அலுவலக ங்களும் அமைத்திருந்தனர். ஆளும்கட்சியான தி.மு.க. வின் எல்.பி.எப். தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., - மற்றும் ஏ.டி.பி., ஆகியன அமைத்திருந்த தொழிற்சங்க அலுவலகங் களும் இடித்து அகற்றப்பட்டன

இதனையறிந்து ஓடி வந்த தொழிறசங்கத்தினர் அலுவலகத் திலிருந்து பொருட்களை வெளியே எடுத்து பத்திரப்படு த்தினர். கொடிக்கம்பம், அறிவிப்பு பலகை ஆகியனவும் அகற்றப் பட்டது. அங்கு திரண்ட தொழிற் சங்க நிர்வாகிகளும், ஊழியர் களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே தகவல் அளித்து, அவகாசம் வழங்கியும் ஏன் அகற்றவில்லை என கேட்டு அதிகாரிகள் ஊழியர்கள் மூலம் பொக்லைன் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.அப்பகுதியி ல் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றும் உள்ளது. அதன் சார்பிலும் பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்குடை அருகே மற்றொரு நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. அதனையும் நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொங்கு வியாபாரிகள் நலச் சங்க தலைவர் சக்திவேல் தலைமையில் சிலர் அப்பகுதிக்கு வந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து, ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

நெடுஞ்சாலைத்துறையின் அதிரடி நடவடிக்கையால் ஆக்கிரமிப்பாளர்கள் அரண்டு போயினர். கடும் நெருக்கடி மற்றும் எதிர்ப்புக்கு இடையே இதனை மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையை பலரும் பாராட்டினர். மேலும் காங்கேயம் கிராஸ் ரோட்டில் கோடிகள் கொடுத்து தனியார்களிடம் நிலம் வாங்கி சாலை விரிவாக்கம் செய்தும் பலன் இல்லை கடும் போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது எனவே அதிகாரிகள் காங்கேயம் கிராஸ் ரோடு ஆக்கிரிமிப்புகளையும் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் 

காலை முதல் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால், காங்கயம் ரோட்டில் நீண்ட நேரம் போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது.



மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்.


.