சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது துபாயில் இருந்து சென்னை சென்ற எமிரேட்ஸ் விமானத்தின் கேபின் ஊழியரை விசாரித்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். என்னை தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது அவர் தனது இடுப்பு மற்றும் மார்பு பகுதியில் வெள்ளை காகிதத்தில் பத்து தங்க பேஸ்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூபாய் 11 கோடியே 50 லட்சம் ஆகும். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...