வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீ விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
மேலும் வங்கதேசத்தின் ராணுவப்படை, விமானப்படை, கடற்படை மற்றும் எல்லை காவல் படை பணியாளர்கள் உடனடியாக மீட்பு பணிகளில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதேபோன்று விமானங்கள் தரையிறங்குவதும் புறப்படுவதும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்த எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை. மேலும் இந்த விபத்து காரணமாக விமான நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் புகைமண்டலமாக காட்சியளித்தது.