மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் சேதம்
23 October 2025
மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் சேதம்
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 700 ஏக்கர் நெல் பெயர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.
தொடர் மழை, மற்றும் வாய்க்கால்களில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் அவை விளைநிலங்களை சூழ்ந்து பயிர்களை சேதப்படுத்தியது.
குறிப்பாக ஆனாங்கூர், சாலையம்பாளையம், நன்னாட்டம் பாளையம்,
கோலியனூர், வளவனூர், கண்டமங்கலம் அடுத்த சடையாண்டி குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 700 ஏக்கர் அளவிலான குருவை சாகுபடி நெற் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்