ஆக்ராவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 38 வங்கதேசத்தினர் நாடுகடத்தப்பட்டனர்
10 January 2026
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 8 குழந்தைகள் உட்பட 38 வங்கதேச நாட்டினரை போலீஸார் நாடு நாடு கடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஆக்ராவிலுள்ள சிக்கந்தரா பகுதியில் தங்கியிருந்த இவர்களைப் பற்றி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. விசாரணையில், அவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காக அவர்கள் 38 பேரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 38 பேரில்:
23 ஆண்கள்
7 பெண்கள்
8 குழந்தைகள் அடங்குவர்.
ஆண்களும் பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களின் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தற்போது அவர்களின் 3 ஆண்டு சிறைத் தண்டனை முடிவுக்கு வந்த நிலையில், அனைவரையும் மீண்டும் அவர்களது நாட்டிற்கு அனுப்ப போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்து உதவி காவல் ஆணையர் தினேஷ் சிங் கூறுகையில்:
"சிறைத் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட 38 பேரும் வாகனங்கள் மூலம் வங்கதேச எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வரும் ஜனவரி 13-ஆம் தேதி எல்லைப் பாதுகாப்புப் படையிடம் (BSF) ஒப்படைக்கப்படுவார்கள்."